தமிழக துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது! - மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால்
Sep 6, 2026, 02:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது! – மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால்

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 03:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது என்று மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இது தொடர்பாக, சென்னையில் மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவாக விளக்கமளித்தார்.

அப்போது செய்தியாளரிடம் பேசிய மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால்,

தமிழ்நாடு மிகவும் வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்றார். பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்திலிருந்தே கடல்வழி வணிக வரலாற்றைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். எண்ணூர், சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 பெரிய துறைமுகங்களைக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

சாகர்மாலா, பாரத்மாலா, பிரதமரின் விரிவு சக்தி பெருந்திட்டம் போன்ற முன்முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெரிய துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய துறைமுகங்கள் அமைச்சகம் மிகுந்த கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.

2014-ம் ஆண்டு முதல், தமிழ்நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களில் 45-க்கும் மேற்பட்ட திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவற்றுக்கு ரூ. 16,000 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

சாகர்மாலா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ரூ. 93,671 கோடி மதிப்பிலான 98 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் ரூ.35,247 கோடி மதிப்பிலான 50 திட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன அவர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், மூன்று பெரிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் ஆண்டுக்கு 167 மில்லியன் டன்னிலிருந்து 338 மில்லியன் டன்னாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். கப்பலின் செயல்பாட்டு நேரம் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சாகர்மாலா திட்டத்தின் கீழ், குந்துகால், பூம்புகார், சின்னமுட்டம், மூக்கையூர் ஆகிய 4 இடங்களில் மீன்பிடி துறைமுகத் திட்டங்கள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். சாகர்மாலா திட்டத்தின் கீழ் கடல்சார் துறையில் புதுமைகளுக்காக சென்னை ஐஐடியில் புத்தாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நாளை (28 பிப்ரவரி 2024) பிரதமர் திரு நரேந்திர மோடி, தமிழ்நாட்டில் ரூ.17,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 36 முக்கிய திட்டங்களை தொடங்கிவைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக அவர் கூறினார். மேலும் இது வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய ஒரு படியாகும் என்று  தெரிவித்தார்.

10,324 கோடி மதிப்பிலான 30 திட்டங்கள் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட உள்ளது என்றும், இவற்றில் ரூ.7,587 கோடி மதிப்பிலான 6 திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள இரண்டு துறைமுகங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்

சில ஆண்டுகளுக்கு, நமது பிரதமர், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை இந்தியாவின் கிழக்குக் கடற்கரையின் கப்பல் மாற்று மையமாக உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்திருந்தார் எனவும் அது நாளை நிறைவேறப் போகிறது என்றும் அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் உத்தரவாதம் நிறைவேற்றப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வ.உ.சி. துறைமுகத்தில் ரூ. 7056 கோடி செலவில் வெளி துறைமுக சரக்குப் பெட்டக முனையத் திட்டம் உருவாக்கப்படும் எனவும் இதன் மூலம் நாட்டின் கிழக்கு கடற்கரையில் ஒரு பெரிய கப்பல் போக்குவரத்து மையமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டம் இந்தத் துறைமுகத்தின் கொள்கலன் திறனை பல மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இத்திட்டம் மாநிலத்தின் பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்தும் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு சாந்தனு தாக்கூர், துறையின் செயலாளர் டி.கே. ராமச்சந்திரன், இணைச் செயலாளர் பூஷன் குமார், சென்னை காமராஜர் துறைமுகத்தின் மேலாண் இயக்குநர் ஐரின் சிந்தியா மற்றும் உயர் அதிகாரிகள் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.

Tags: Union Minister Sarbananda Sonawal
Share
Tweet
SendShare
Previous Post

வேட்டையன் படப்பிடிப்புக்காக மீண்டும் ஐதராபாத் சென்றார் ரஜினி!

Next Post

வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் – வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்!

Related News

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies