தேர்தல் களம் 2024, மீண்டும் மோடி வேண்டும் மோடி : அண்ணாமலை
Sep 5, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் களம் 2024, மீண்டும் மோடி வேண்டும் மோடி : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 07:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற முழக்கத்துடன் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில், தன்னம்பிக்கையுடன், ஊழல் பேர்வழிகளை புறம் தாள்ளி, நம்பிக்கையுடன் மக்களைச் சந்திக்கிறோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் பாரதநாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளது.

நம் தேசத்தின் அடுத்த பாரதப்பிரதமர் யார்? என்பதை நிர்ணயிக்கப் போகும் இந்தத் தேர்தலில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று நான் மக்களிடம் பணிவாக வேண்டுகிறேன்.

100 வயதைக் கடந்த 2.18 லட்சம் மூத்த குடிமக்கள் வாக்களிக்கும் தேர்தல், சுமார் 1.82 கோடி புதிய வாக்களர்கள் பங்கு பெறப்போகும் தேர்தல், நாட்டின் 47.10 கோடி பெண்களும், 49.70 கோடி ஆண்களும் வாக்களிக்கும், சுமார் 97 கோடி மக்கள் வாக்களிக்கும் மிகப் பிரம்மாண்டமான தேர்தல்.

சுமார் 55 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் தேர்தல். 40 சதவீதத்திற்கும் அதிகமாக உடல்திறன் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளும், 85 வயதுக்கும் அதிகமான மூத்த குடி மக்களும் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் தேர்தல், மிகவும் பாதுகாப்பான நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் உலகின் மிகப்பெரிய தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது.

நாட்டிற்காகத் தன்னையே அர்ப்பணித்து உழைக்கும் பிரதமர், குடும்ப ஆட்சியை தவிர்த்து, நாட்டு மக்களையே தன் குடும்பமாக நினைக்கும் பிரதமர், உலக நாடுகளில் இந்தியத் திருநாட்டின் பெருமைகளை உயர்த்திய பிரதமர், எழை எளிய மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் எளிதாகக் கிடைக்கச் செய்த பிரதமர், கோவிட் நோய்த் தொற்றுக் காலத்தில் உலக நாடுகள் வியக்கும் வண்ணம் நாட்டின் சுகாதாரத்தையும், பொருளாதாரத்தையும் காப்பாற்றிய பிரதமர், புதிய பாராளுமன்றத்தில் தமிழ் மரபின் பெருமை போற்றும் செங்கோலை நிறுவி, நம் தமிழ் மொழியைத் தன் தாயைப்போல நேசிக்கும் நம் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை மீண்டும் தேர்ந்தெடுத்து பெருவாரியாக வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று தமிழக மக்களை வேண்டுகிறேன்.

தமிழகத்தில் மிகக் குறுகிய காலத்தில், வரும் 20.03.24 அன்று வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று ஏப்ரல் 19-ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற முழக்கத்துடன் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில், தன்னம்பிக்கையுடன், ஊழல் பேர்வழிகளை புறம் தாள்ளி, நம்பிக்கையுடன் மக்களைச் சந்திக்கிறோம். ஆகவே தமிழக மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக் கடமையை தவறாது நிறைவேற்ற முன் வரவேண்டும் என்று வேண்டுகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: bjpannamalaiparlimentary election
Share
Tweet
SendShare
Previous Post

மக்களவைத் தேர்தல்: மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு!

Next Post

தேர்தலை ED – IT கண்காணிக்கும் – தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் பேட்டி

Related News

கே.என் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies