மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க புதிய செயலி அறிமுகம் !
Jun 23, 2026, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க புதிய செயலி அறிமுகம் !

Murugesan M by Murugesan M
Mar 27, 2024, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாற்றுத் திறனாளி  வாக்காளர்களுக்காக ‘‘சாக்‌ஷம்’ என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில், பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம், கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு செயலிகள் மூலம் வாக்காளர்கள், வேட்பாளர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ‘சுவிதா’ என்ற ஒரு செயலி வேட்பாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்வது, வேட்புமனுவின் நிலை குறித்து அறிந்து கொள்வது, பிரச்சாரத்துக்கான அனுமதி பெறுவது, அனுமதி விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்வது, அனுமதிக்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் பெற்று பதிவு செய்தல் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த செயலி மூலம் வேட்பாளர்களின் நேரம் மிச்சமாவதுடன், சரியான விவரங்களையும் பெற முடியும்.

அதேபோல் ‘சாக்‌ஷம்’ என்ற மற்றொரு செயலி  உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாக்‌ஷம் செயலியைப் பொறுத்தவரை மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்வதற்காக பிரத்யேகமாக தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல்முறை வாக்களிக்க உள்ள இளம் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால், இதில் உள்ள பெயர், முகவரி, செல்போன் எண், மாநிலம், மாவட்டம், தொகுதி உள்ளிட்ட விவரங்கள் கிடைத்துவிடும்.

வாக்குப்பதிவு தினத்தன்று மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளை இதன்மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த செயலியில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு குரல்வழி உதவியும், கேட்கும் திறனற்ற மாற்றுத் திறனாளிக்கு பேசினால் எழுத்தாக பதிவாகும் வசதி போன்றவையும் உள்ளன.

இந்த செயலியில், வாக்குச்சாவடி மையம், அதன் அமைவிடம், அந்த வாக்குச்சாவடி மையத்தில் உள்ள வசதிகள், வாக்குப்பதிவு அலுவலர்களின் தொடர்பு எண்கள் இடம் பெற்றிருக்கும். மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவின் போது சந்திக்கும் பிரச்சினைகளையும் இந்த செயலி வழி பதிவு செய்யும் வசதி உள்ளது.

Tags: Election commissionsaksham appdisability
ShareTweetSendShare
Previous Post

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு அபராதம் !

Next Post

இயேசுபிரானின் அன்பும், அருளும் அனைவரின் இதயத்தையும் அமைதியால் நிரப்பட்டும்! – அண்ணாமலை

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies