போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக போலந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்கை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து ரயிலில் உக்ரைன் தலைநகர் கீவுக்கு பிரதமர் சென்றார்.
அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்து இந்தியா சார்பில் மருத்துவ உபகரணங்களை பிரதமர் மோடி வழங்கினார். இதையடுத்து மீண்டும் ரயிலில் போலந்துக்கு சென்ற அவர், அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.
டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் வரவேற்பளித்தனர்.