வெளிநாட்டு முதலீடு - வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தும் எதிர்கட்சிகள்!
Aug 6, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டு முதலீடு – வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தும் எதிர்கட்சிகள்!

Murugesan M by Murugesan M
Aug 29, 2024, 10:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக முதலமைச்சரின் துபாய் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை செயல்படுத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக, தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு, RTI மூலம் கிடைத்த தகவலில் உறுதியாகி உள்ளது. அதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்…

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை அதிகளவு கொண்டு வரதுக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு இருக்கக் கூடிய பெரிய, பெரிய தொழில் நிறுவனங்களின்  அதிபர்கள், புலம்பெயர் தமிழர்களை சந்தித்து  தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க அழைப்பு விடுக்க இருக்குறதா சொல்லியிருக்காங்க.

தொழில் முதலீடுகளை கொண்டு வருகிறோம் என்று கூறி  அடிக்கடி வெளிநாட்டுக்கு போற முதலமைச்சர், அங்க கையெழுத்தாகும்  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமா எவ்வளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியிருக்காங்க ? அது மூலமா எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியிருக்கு எனபதை  வெளிப்படையாக சொல்றதில்லனு என குற்றம்சாட்டும்  எதிர்க்கட்சித் தலைவர்கள்  வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரி வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் கேக்குற கேள்விகளையும், அடுக்குற குற்றச்சாட்டுகளையும் கொஞ்சம் கூட கண்டுக்காத முதலமைச்சர், ஐக்கிய அமீரக நாடுகள், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் வரிசையில அடுத்ததா அமெரிக்காவுக்கு கிளம்பி போயிருக்காரு. முதலமைச்சர் அடுத்தடுத்த வெளிநாட்டு பயணத்துல போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்தும், தமிழ்நாட்டுல ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்தும் தமிழக அரசு எதுமே சொல்லாத நிலையில தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூல சில பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

2022 ல துபாய் பயணத்தின் போது 6,100 கோடி ரூபாய் மதிப்புல போடப்பட்ட 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்ல மூனு மட்டும் தான் செயல்பாட்டுக்கு வந்திருக்கு. எஞ்சிய  மூனு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பாக  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கல. அதாவது துபாய் பயணத்துல போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்ல 50 சதவிகிதம் முதலீடுகள் வரலங்குறது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிய வந்துருக்கு.

முதலமைச்சரோடு வெளிநாட்டு பயணத்துல ஈர்க்கப்பட்ட முதலீடு மட்டும் தான் முழுசா வரலனு நினைச்சுர வேணாம். கடந்த ஜனவரி மாசம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுல போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்லயும் 50 சதவிகிதம் கூட செயல்பாட்டுக்கு வரவில்லை என்ற தகவலும் நமக்கு கிடைச்சுருக்கு. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமா புரிந்துணர்வு ஒப்பந்தப்பம் போடப்பட்ட 631 திட்டங்கள்ல இதுவரை 248 திட்டங்கள் மட்டுமே அதாவது 40 சதவிகிதம் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துருக்கு.

இதனிடையே அமெரிக்காவுக்கு கிளம்பிப் போகும் போது ஏர்ப்போர்ட்ல செய்தியாளர்களை சந்திச்ச முதலமைச்சர், தமிழ்நாட்டுல ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் அதனால உருவான வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுறது மரபு கிடையாதுனும், அத தொழில் நிறுவனங்கள் விரும்ப மாட்டாங்கனு விளக்கம் கொடுத்துருக்காரு.

ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களுக்குள் கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சிக்காலத்துல நிலவிய நிதிப்பற்றாக்குறை சம்பந்தமாக வெள்ளை அறிக்கையை விரிவா, விளக்கமா வெளியிட்ட திமுக அரசு, முதலீடுகள் பத்தியும், வேலைவாய்ப்புகள் பத்தியும் வெள்ளை அறிக்கை வெளியிட மறுக்குறது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கு.

தமிழகத்துல முதலீடுகளை கொண்டு வரதுக்காக முதலமைச்சரோடு வெளிநாட்டு பயணம் அவசியமானது தான் என்றாலும், அதனால ஈர்க்கப்படுற முதலீடுகள் குறித்தும், அது மூலமா உருவாகுற வேலை வாய்ப்புகள் குறித்தும் தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் வெளிப்படையா தெரிவிக்க வேண்டியதும் அரசோட கடமை தான்…

Tags: Tamil Nadu Chief MinisterRTIforeign investmentdubaitamil janam tvChief Minister M. K. Stalin
Share
Tweet
SendShare
Previous Post

ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் – மாற்று வினாத்தாள் வழங்க ஏற்பாடு!

Next Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலை3

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies