மது ஒழிப்பு மாநாட்டிற்கு விசிக தலைவர் திருமாவளவன் முறையாக அழைத்தால் கட்சி தலைமையிடத்தில் பேசி கலந்து கொள்வது குறித்து முடிவெடுப்போம் என விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் தேமுதிக சார்பில் மலர் வளையம் வைத்து விஜய் பிரபாகரன் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்முறையாக தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளதாக கூறினார்.
தேமுதிக வைத்த கோரிக்கையை ஏற்று தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவை அரசு விழாவாக திமுக அரசு அறிவித்துள்ளதற்கு பாராட்டுகள் எனவும் விஜய் பிரபாகரன் தெரிவித்தார்.