புதுச்சேரியில் உள்ள நரம்பை மீனவ கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த போலீசாரை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நரம்பை மீனவ கிராமத்தில் உள்ள இந்திய ரிசர்வ் பட்டாலியனுக்கு சொந்தமான இடத்தில் தலைமையகம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்கான இடத்தை ஆய்வுசெய்ய போலீசார் மற்றும் அதிகாரிகள் சென்றனர். அப்போது தலைமையகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலையில் கருப்பு கொடியுடன் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.