விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலைகள் கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை யொட்டி, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை, பாரம்பரிய வழக்கப்படி நீர்நிலைகளில் கரைத்து வருகின்றனர்.
அந்த வகையில், திண்டிவனம் மற்றும் செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, மரக்காணத்தில் உள்ள எக்கியார்குப்பம் மற்றும் கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.