கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலை மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள மீனவ கிராமத்தில் இருந்து 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
கோடியக்கரையின் தென்கிழக்கே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினர் கப்பலை மோதி விபத்து ஏற்படுத்தியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காயங்களுடன் வலைகளில் சிக்கி தத்தளித்த தங்களை கப்பலில் ஏற்றி முதலுதவி செய்யாமல் சுமார் 6 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறியுள்ளனர்.
மேலும், நடுக்கடலில் விட்டு சென்ற தங்களை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்ததாகவும், இலங்கை கடற்படையினரின் அராஜக செயலால் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் கடலில் அடித்து செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.