அருந்ததியர் சமூகத்திற்கான உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி மறு சீராய்வு மனு தாக்கல் செய்ததை கண்டித்து சேலத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டம் நடத்தினர்.
ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அருந்ததியினரின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டும் என தெரிவித்த திருமாவளவனை கண்டித்தும், விசிக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அக்கட்சி திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.