வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்துக்கு 10-இல் 9 பேர் ஆதரவு தெரிவித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
வக்ஃபு வாரியங்களில் இஸ்லாமிய பெண்களும், இஸ்லாமியர் அல்லாதோரும் இடம்பெறுவதை உறுதிசெய்யும் சட்டத் திருத்த மசோதாவை ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில் 47 ஆயிரம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் 90 சதவீதம் பேர் வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிலும் 96 சதவீதம் பேர் வக்ஃபு வாரிய சொத்துகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். ஆய்வு நடத்தப்பட்ட 47 ஆயிரம் பேரில் 34 ஆயிரத்து 540 பேர் இந்துக்கள் என்றும், 7,213 பேர் இஸ்லாமியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.