பாகிஸ்தான் நாட்டில் எம்பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை நோய் பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
ஆப்ரிக்க நாட்டில் குரங்கம்மை நோய்க்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த 1ம் தேதி 4 பேருக்கு அந்நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் லோயர்திர் பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டில் எம்பாக்ஸ் பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்ந்தது.