இந்தியாவில் வாகன உற்பத்தியில் முதலீடு செய்ய வேண்டாமென சீன நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெய்ஜிங்கில் சீன வர்த்தகத் துறை சார்பில் அண்மையில் தொழில் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் அதிநவீன தொழில்நுட்பங்களை சீனாவில் மட்டுமே வைத்திருக்க வேண்டுமென வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வாகனங்களின் முக்கிய உதிரி பாகங்களை சீனாவில் உற்பத்தி செய்து, அவை இறுதிவடிவம் பெறுவதற்காக மட்டுமே அவற்றை ஏற்றுமதி செய்ய வேண்டுமென தொழில் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.