மெக்சிகோ வளைகுடா அருகே நிலை கொண்டிருந்த ஃபிரான்சின் சூறாவளி தென்கிழக்கு லூசியானாவில் கரையைக் கடந்தது.
ஃபிரான்சின் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் லூசியானாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், இதனால் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வீடுகளில் இருளில் மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்தபோது பலத்த மழை பொழிந்ததாகவும், பலத்த காற்று காரணமாக வீடுகளின் மேற்கூரைகள், மின்கம்பங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், லூசியானா மற்றும் மிசிசிப்பி மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.