சென்னை விமான நிலையத்தில் 2 கிலோ தங்க பசைகளை கடத்திய ஒப்பந்த ஊழியர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
துபாயில் இருந்து இலங்கை செல்லும் டிரான்சிட் பயணி ஒருவர் தங்கம் பசை அடங்கிய பார்சல்களை கடத்தி வந்து சென்னை விமான நிலைய கழிவறை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு மற்றொரு விமானத்தில் இலங்கைக்கு சென்றுள்ளார்.
கடத்தல் பயணி ஏற்கனவே, விமான நிலைய ஒப்பந்த ஊழியரிடம் தகவல் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், கழிவறையில் இருந்த தங்கப் பசை பார்சல்களை எடுத்துவந்த இரண்டு ஒப்பந்த ஊழியர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது கருவிக்குள் மறைத்து கடத்தி வந்த ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.