நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணக்கில் வராத பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேரங்கோடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முறைகேடு நடப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் கணக்கில் வராத 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.