ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தரங் சக்தி விமானப் படை பயிற்சியையொட்டி, ராணுவ ஹெலிகாப்டர்களின் சாகசம் நடைபெற்றது.
ஜோத்பூரில் தரங் சக்தி போர்ப் பயிற்சி கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, ஹெலிகாப்டர்களின் சாகசம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் புகையைக் கக்கியவாறு வானில் வட்டமடித்து சாகசம் செய்தது அனைவரையும் கவர்ந்தது.
நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒருகாலத்தில் ஆயுத தளவாடங்களை இறக்குமதி செய்த இந்தியா, இன்றைக்கு 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்வதாக பெருமிதம் தெரிவித்தார்.