“அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் தலைமை அலுவலகம் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி வழக்கு தொடரப்படும்” என அமமுக துணைப் பொதுச் செயலளார் செந்தமிழன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “வரும் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை தலைமை அலுவலக கட்டிடத்தை பயன்படுத்தி கொள்ள ஒப்பந்தம் உள்ளது” என தெரிவித்தார். மேலும், தாம் அதிமுகவில் இணைவதாக ஒரு சிலர் வதந்தி பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.