ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் மசூதியில் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க இஸ்லாமியர்களின் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
சிம்லாவில் உள்ள மசூதி ஒன்றில் ஒரு மாடி கட்டடம் கட்ட மாநகராட்சி அனுமதி அளித்த நிலையில், ஐந்து மாடிகள் கட்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில், மசூதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டுமானங்களை இடிக்க இஸ்லாமியர்களின் குழு ஒப்புதல் தெரிவித்து, மாநகராட்சியிடம் கடிதம் கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வகையில், அக்டோபர் 5-ஆம் தேதி நீதிமன்றம் முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.