3-ஆவது பதவிக்காலத்தில் முதல் நூறு நாளில் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, குருஷேத்ராவில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். அப்போது தான் கூறியபடி, 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவிததார்.
ஏழை மக்களின் நலனுக்காக 3 கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டதை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.
நகர்ப்புற நக்ஸல் கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், அக்கட்சி ஆளும் மாநிலங்களில் விநாயகர் சிலையைக் கூட இரும்பு கம்பிக்குள் வைக்க வேண்டியிருப்பதாக வேதனை தெரிவித்தார்.
ஹரியானாவுடன் சேர்த்து ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெறுவதால், அங்கு பிரசாரம் செய்த பிரதமர் மோடி, ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டு சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக விரைவில் மாறும் என நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் பாஜக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை பட்டியலிட்டு, அவர் வாக்கு சேகரித்தார்.