தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3- வது இடம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளரும் நீா்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு 2-வது இடம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக துணை முதலமைச்சர் உதயநிதிக்கு 3வது இடம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உதயநிதியை தொடா்ந்து, அமைச்சா்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி அடுத்தடுத்த இடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 5ஆம் வரிசையில் இருந்த அமைச்சர் பொன்முடிக்கு 6-ம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து ஏ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு என ஏற்கெனவே இருக்கும் வரிசைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதிதாக அமைச்சராக பொறுப்பேற்ற சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரனுக்கு 19வது இடமும், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனுக்கு 27வது இடமும் அளிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.