திருநெல்வேலியில் பெண்கள் கல்லூரி முன் பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி – நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு அருகே இருசக்கர வாகனங்களில் வரும் இளைஞர்கள், சமூக வலைதளங்களில் லைக்குளை வாங்குவதற்காக வீலிங் சாகசம் செய்து அடாவடியில் ஈடுபடுகின்றனர்.
ஆபத்தை உணராமல் இளைஞர்கள் எடுக்கும் இந்த சாகச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்நிலையில், சாலையில் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.