தேர்தல்களை பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி! : உச்சநீதிமன்றம்
Oct 4, 2026, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தேர்தல்களை பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி! : உச்சநீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Nov 27, 2024, 02:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல்களை பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

‘மின்னணு வாக்குப்பதிவு முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதால், பழையபடி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வலியுறுத்தி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.  இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரருக்கும், நீதிபதிகளுக்கும் இடையே கடும் வாதங்கள் நடந்தன.

அப்போது, தங்களுடைய பொதுநல மனு மிகவும் சுவாரஸ்யமாக உள்ளதாக விமர்சித்த நீதிபதிகள், பிற நாடுகளில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படுகிறதா அல்லது மின்னணு வாக்குப்பதிவு முறை பின்பற்றப்படுகிறதா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு வாக்குச்சீட்டு முறைதான் பின்பற்றப்படுகிறது என பதிலளித்த மனுதாரர், இந்தியாவில் ஊழல் மலிந்துள்ளதாகவும், கடந்த மக்களவை தேர்தலில் 9 ஆயிரம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.  இதனையடுத்து, மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றினால் ஊழல் ஒழிந்துவிடுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக எலான் மஸ்க், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் தெரிவித்துள்ளதாக மனுதாரர் பதிலளித்தார்.

அவரது வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேர்தலில் தோற்றால் மின்னணு வாக்குப்பதிவு முறையை குறை கூறுவதும், வெற்றிப்பெற்றால் மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு ஆதரவு தெரிவிப்பதும் இயல்புதான் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags: supreme courtThe petition filed to change the elections to the old ballot system was dismissed! : Supreme Court
Share
Tweet
SendShare
Previous Post

கனமழை காரணமாக ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Next Post

சமூக வலைதளங்களில் விரும்பத்தகாத விஷயங்கள்! – அஸ்வினி வைஷ்ணவ் புகார்

Related News

கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை

ஹாக்கியில் தங்கம் வென்ற மகளிர் அணிக்கு தலா 11 லட்சம் – ஒடிசா அரசு அறிவிப்பு!

F-16 போர் விமானங்களை பாரமரிக்க முடியாமல் தரையிறக்கிய உக்ரைன் – சிறப்பு தொகுப்பு!

வாட்ஸ்அப் செயலிக்கு போட்டி – அரட்டை பிசினஸ் செயலியை அறிமுகம் செய்தது ஜோஹோ!

ஃபிளை துபாய் விமானத்தில் தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானி – Oman Air நிறுவனத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது அம்பலம்!

இந்தியாவின் பண்டைய அறிவு உலக மோதல்களை தவிர்க்க வழிகாட்டும் – மோகன் பகவத்

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதியுங்கள்; உச்சநீதிமன்றத்தில் மனு

தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு; நாளை மறுதினம் வாக்குப்பதிவு

90 % பணவீக்கம் : சரிந்த ஈரான் பொருளாதாரம் – அடுத்தது என்ன? சிறப்பு தொகுப்பு!

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் – சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னையில் இந்து முன்னணி ஆர்பாட்டம்!

கொடைக்கானல் நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் : 3- வது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல்!

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இல்லத்தரசிகள் கோரிக்கை!

தாராபுரம் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – உதயநிதி மீது வழக்குப்பதிவு!

முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? – அவர் ஆட்சி மேல் அவருக்கே நம்பிக்கை இல்லை – மு.க.ஸ்டாலின்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies