விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், அனுமந்தை குப்பம், பிள்ளை சாவடி, மற்றும் அதை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில்கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
கடல் அலைகள் 15 அடிக்கு மேல் உயர்ந்து சீறிப்பாய்வதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும் தந்திராயன் குப்பம் கடற்கரை பகுதிக்கு வருகைதந்த சுற்றுலா பயணிகள், ஆபத்தை உணராமல் பாறைகள் மீது ஏறி புகைப்படம் எடுத்து வருகின்றனர்.