ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தற்போது வரை காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மாவட்டத்தில் வாலாஜாபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் குளிர்ச்சியான காற்றுடன் கூடிய மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாதுகாப்பு கருதி பெரும்பாலான பொது மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.