தேச வளர்ச்சிக்கு வாஜ்பாய் அளித்த பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!
Jul 29, 2026, 07:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேச வளர்ச்சிக்கு வாஜ்பாய் அளித்த பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

Murugesan M by Murugesan M
Dec 25, 2024, 09:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேச வளர்ச்சிக்கு வாஜ்பாய் அளித்த பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம் என  மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “முன்னாள் பாரதப் பிரதமர் ‘பாரத ரத்னா’ அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100-வது ஆண்டு பிறந்த தினம் இன்று. இருபதாம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில், பாரத தேசம் அடையத் துவங்கிய அசுர வளர்ச்சிக்கு தனது ஆட்சிக் காலத்தில் வித்திட்ட ஐயா வாஜ்பாய் அவர்கள், தொழில்நுட்பம் சார்ந்து தனக்கிருந்த தொலைநோக்குப் பார்வையின் மூலம் தேசத்தை கட்டமைக்கத் துவங்கினார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில், தங்க நாற்கரச் சாலை திட்டம் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளை சர்வதேச தரத்தில் கட்டமைத்ததன் விளைவாக, தொழில் போக்குவரத்திற்கு சாதகமான சூழல் கொண்ட தேசமாக இந்தியாவை உருவாக்கினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் தலைமையில், வாஜ்பாய் அவர்கள் 1998-ஆம் ஆண்டு மேற்கொண்ட ‘பொக்ரான்’ அணு ஆயுத சோதனையின் மூலம், ராணுவ வல்லரசுகளுக்கு சிறிதும் குறைவில்லாத நாடு நமது பாரதம் என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

எதிர்க்கட்சித் தலைவராக, வெளியுறவுத் துறை அமைச்சராக, பிரதமராக ஆற்றிய பணிகள் ஏராளம். தனது தேர்ந்த அரசியல் அனுபவத்தின் மூலம் நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்தார்.

தனது வாழ்நாளின் பெரும்பான்மை காலத்தை, அரசியல் மூலம் நாட்டு மக்களுக்கு சேவை புரிவதில் அர்ப்பணித்து வாழ்ந்த, ஐயா ‘பாரத் ரத்னா’ அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் இன்றைய 100-வது பிறந்த தினத்தில், தேசத்தின் வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: L Muruganminister l muruganvajpayee 100th birth anniversary
ShareTweetSendShare
Previous Post

பாரதத்தை வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறச் செய்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் – அண்ணாமலை புகழாரம்!

Next Post

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies