ரஷ்யா மீது அதிரடி டிரோன் தாக்குதல் - 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தகவல்!
Jul 29, 2026, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்யா மீது அதிரடி டிரோன் தாக்குதல் – 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 2, 2025, 07:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்ய விமானப்படை தளத்தை குறிவைத்து நடத்திய டிரோன் தாக்குதலில் 40 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் மறு முனையில் உள்ள விமானப்படை தளத்தை உக்ரைன் ட்ரோன்கள் வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளன. பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்கை உக்ரைன் துல்லியமாக தாக்கி அழித்திருப்பது ரஷ்யாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் உள்ள விமானப்படை தளம் மீது உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. உக்ரைன் தலைநகரான கீவ்-லிருந்து சுமார் 6,000 கி.மீ தொலைவில் இந்த விமானப்படை தளம் அமைந்துள்ளது. இவ்வளவு தொலைவில் உள்ள விமானப்படை தளத்தை உக்ரைன் ட்ரோன்கள் துல்லியமாக தாக்கியிருப்பது ரஷ்ய ராணுவத்திற்கு பீதியை கிளப்பியுள்ளது.

இந்த தாக்குதலில் சுமார் 40 விமானங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியான நிலையில், இர்குட்ஸ்க் மாகாணத்தின் ஆளுநர் இந்த தாக்குதல் நடந்தது உண்மை என ஒப்புக்கொண்டுள்ளார். கிழக்கு சைபீரிய நகரமான பெலாயா, பின்லாந்து நாட்டின் அருகே உள்ள ஒலென்யா, மாஸ்கோவின் கிழக்கே உள்ள இவானோவோ மற்றும் டியாகிலெவோவில் உள்ள ரஷ்ய விமானப்படை தளங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ரஷ்யாவின் Tu-95, Tu-22M3 மற்றும் A-50 ரக விமானங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் எதிரி நாட்டின் மீது குண்டுகள் வீச பயன்படுத்தப்படும் விமானங்கள் என கூறப்படுகிறது

தற்போது தாக்குதலின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த போரில் உக்ரைன் இந்த அளவுக்கு ஆக்ரோஷமான தாக்குதலில் ஈடுபட்டது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் நீண்ட தூர தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த விமானங்களை அழிப்பதற்கு உக்ரைன் தனி திட்டம் ஒன்றை தீட்டியுள்ளது. ‘ஸ்பைடர் வலை’ என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் விமானப்படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு ஏறத்தாழ ஓராண்டு காலம் உக்ரைன் ராணுவம் திட்டம் தீட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்த ஒரு ட்ரோனும் தொடர்ந்து 6,000 தொலைவுக்கு அப்பால் பறக்காது. எனவே மரக்கட்டைகளை ஏற்றி செல்லும் லாரியில் இந்த ட்ரோன்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்த லாரிகள் விமானப்படை தளத்தை நெருக்கியபோது, உக்ரைனிலிருந்து ஆப்ரேட் செய்யப்பட்டுள்ளன. எதிர்பார்த்தபடி எல்லாமும் சரியாக நடந்ததால், ரஷ்யாவின் விமானப்படைத்தளம் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதி ஏற்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்த தாக்குதல் ரஷ்யாவை கடுமையாக சீண்டும். உக்ரைனுக்கு பதிலடி வழங்கும் வகையில் ரஷ்யா நடத்தும் தாக்குதல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: 40 warplanes destroyedRussian air base.Ukraine attacked russiarussiaUkraine
ShareTweetSendShare
Previous Post

இலையிலேயே குட்டி தூக்கம் போட்ட திமுக தொண்டர்கள் – முதல்வர் சாப்பிடுவதற்காக 2 மணி நேரம் உணவு பரிமாறப்படாததால் விரக்தி!

Next Post

ஐபிஎல் கிரிக்கெட் – இறுதிப்போட்டியில் பஞ்சாப்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies