தனியார் நிறுவனம் மீது புகார் : சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் சீர்கேடு!
Sep 6, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் நிறுவனம் மீது புகார் : சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் சீர்கேடு!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 08:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் கழிவுகளும் பாண்டியன் கோட்டைப் பகுதியில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகப் புகார் எழுந்துள்ளது. சட்டத்திற்கு விரோதமாகக் கழிவுகளை கொட்டும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அவனியாபுரம் அடுத்துள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. அந்தக் குப்பைகளை அள்ளி கிடங்குகளில் கொட்ட ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள அவர்லேண்ட் எனும் தனியார் நிற்வனம் அண்மைக்காலமாகவே திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாண்டியன்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கொட்டி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இரவு நேரங்களில் குப்பைகளைக் கொட்டுவதோடு அதனை அவ்வப்போது தீயிட்டுக் கொளுத்துவதால் பாண்டியன்கோட்டைப் பகுதி முழுவதுமே புகை மண்டலமாகச் சூழ்ந்து பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. குப்பைகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுவதால் அதில் இருந்து எழும் கரும்புகையால் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

குப்பைக் கிடங்கில் தான் குப்பைகளைக் கொட்ட வேண்டும் என்ற ஒப்பந்தம் போட்ட பின்னரும் குறிப்பிட்ட தனியார் நிறுவனம் குடியிருப்பு மற்றும் அரசுக்குச் சொந்தமான இடங்களை குப்பைகளைக் கொட்டி வருவதாகப் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் புகார்  தெரிவித்துள்ளனர். செப்டிங் டேங்க் கழிவுகள், கட்டுமான கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் என அனைத்துவிதமான கழிவுகளும் கொட்டப்படுவதால் பொதுமக்கள் மட்டுமல்லாது அக்கழிவுகளை உண்ணக்கூடிய கால்நடைகளும் நோய்வாய் பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சட்டத்திற்கு விரோதமாகவும், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்ளும் தனியார் நிறுவனத்தின் செயல்கள் குறித்து பலமுறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் மீதும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்பதோடு பொது இடங்களில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது.

Tags: Complaint against private company: Illegal dumping of waste causing disruptionதனியார் நிறுவனம் மீது புகார்கழிவுகளால் சீர்கேடு
Share
Tweet
SendShare
Previous Post

தடைகல்லாக நின்ற அமெரிக்கா : தடைகளை தகர்த்தெறிந்த இந்தியா!

Next Post

புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள் : இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை!

Related News

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies