புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள் : இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை!
Sep 6, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள் : இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க 50 சதவிகிதம் வரை வரி விதித்திருக்கும் நிலையில், இந்தியா முழுவதும் அமெரிக்க எதிர்ப்பு அலை அதிகரித்து வருகிறது. அதன் தாக்கத்தை அமெரிக்க நிறுவனங்கள் உணரத் தொடங்கியுள்ளன.

இந்தியாவுக்கு 50 சதவிகித வரி விதிப்பை அமல்படுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விமர்சனக் கணைகள் வீசப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 27ம் தேதி முதல் அமெரிக்காவின் 50 சதவிகித வரிவிதிப்பு அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்த நிலையில், இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது.

இதன் தாக்கத்தைப் பெப்ஸி, கோகோ கோலா, சப்வே, கேஎஃசி, மெக்டொனால்ட்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன. வர்த்தகப் போர் காரணமாக சுதேசி பொருட்களை ஆதரிக்குமாறு இந்தியர்களை வலியுறுத்தியுள்ள பிரதமர் மோடி, பொருளாதாரச் சுயநல அரசியல், உலக அளவில் பரவி வருவதாகவும், தங்களது சொந்த நலனில் மட்டுமே சில நாடுகள் கவனம் செலுத்துவதாகவும் அமெரிக்காவை மறைமுகமாகச் சாடியிருந்தார். இது தற்போது மக்களிடையே உணர்வுபூர்வமான தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஆம் ஆத்மி எம்.பி., அசோக்குமார் மிட்டல், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எழுதியுள்ள கடிதமும் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க வரி விதிப்பின் மூலம், 1905ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதேசி இயக்கத்தை 146 கோடி இந்தியர்களும் உணர்வுபூர்வமாக உணர்ந்திருப்பதாகக் கூறினார்.

அந்த உணர்வை இந்தியர்கள் வெளிப்படுத்தினால், பொருளாதார தாக்கம் இந்தியாவைவிட அமெரிக்காவுக்குத்தான் அதிகமாக இருக்கும் என்று டிரம்பை எச்சரித்திருந்தார். பெப்சிகோ, மெக்டொனால்ட்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் மேற்கொண்டுள்ள வணிகத்தால் கொள்ளை இலாபத்தை ஈட்டுகின்றன.

மெக்டொனால்டுகளை இயக்கும் நிறுவனமான Westlife Foodworld Limited 2024ம் நிதியாண்டில் 2 ஆயிரத்து 390 கோடி வருவாயை ஈட்டியது. இது முந்தைய ஆண்டை விட 5 சதவிகிதம் அதிகம். பெப்சிகோ இந்தியா அதே நிதியாண்டில் 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியிருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் பெப்சிகோ இந்தியா நிறுவனம், 4000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருப்பது, இந்திய சந்தைக்கான நீண்டகால உறுதிபாட்டை எடுத்துக்காட்டுகிறது. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடாவில் அமெரிக்காவைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கவிட்ட நிலையில், இந்தியாவில் வீசும் அமெரிக்க எதிர்ப்பு அலை, அமெரிக்க நிறுவனங்களுக்குக் கணிசமான இழப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Tags: American companies lament: Anti-American wave in Indiaபுலம்பும் அமெரிக்க நிறுவனங்கள்பெப்ஸிகோகோ கோலாசப்வேகேஎஃசிமெக்டொனால்ட்ஸ்americausaDonald Trumpஇந்தியா
Share
Tweet
SendShare
Previous Post

தனியார் நிறுவனம் மீது புகார் : சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் சீர்கேடு!

Next Post

தர்மஸ்தலா பொய்வழக்கில் தொடர்பு? : வழக்கின் விசாரணையை திசைதிருப்ப உண்ணாவிரதம்!

Related News

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies