தோட்டக்கலைத் துறை அதன் தனித்துவம், நிபுணத்துவத்துடன் தனித்துறையாக தொடர வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
Aug 24, 2026, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தோட்டக்கலைத் துறை அதன் தனித்துவம், நிபுணத்துவத்துடன் தனித்துறையாக தொடர வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 தோட்டக்கலைத் துறையின் தனித்துவம் குலைந்தால், வேலைவாய்ப்பு, திறன் முதலீடு ஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திமுக அரசு வெளியிட்டுள்ள உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0 (UATT 2.0) தொடர்பான அரசாணைகள் எண் 252 மற்றும் 288, “கள அலுவலர் ஒருங்கிணைப்பு” என்ற பெயரில், தோட்டக்கலைத் துறையின் தனித்துவம், நிபுணத்துவம் மற்றும் செயல்திறனை குலைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, இன்று தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தோட்டக்கலை சாகுபடி பரப்பு 13.5% மட்டுமே என்றாலும், உற்பத்தி மதிப்பில் 30.5% மற்றும் தமிழக வேளாண் ஏற்றுமதியில் 58–60% பங்கு. இத்தகைய உயர் மதிப்புத் துறைக்கு தனி நிர்வாகமும் துறைசார் நிபுணத்துவமும் அவசியம். ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் விற்பனை துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரே அலுவலருக்கு பல துறைத் திட்டங்களை ஒப்படைப்பது, நிர்வாக குழப்பத்தையும் செயல்திறன் குறைவையும் உருவாக்கும் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையில், தொழில்நுட்ப அலுவலர்கள் பலருக்கு முன் அறிவிப்பு இன்றி, தொலைதூர மாவட்டங்களுக்கு அவசர பணியிட மாற்ற ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் கடுமையான பொருளாதார சுமை மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, அவர்களது குழந்தைகளின் கல்வித் தொடர்ச்சியும், எதிர்காலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் சுமார் 1000 தோட்டக்கலை பட்டதாரிகள் உருவாகின்றனர். இந்தத் துறையின் தனித்துவம் குலைந்தால், வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி, திறன் முதலீடு ஆகியவை நீண்டகாலத்தில் கடுமையாக பாதிக்கப்படும் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

எனவே, விவசாயிகள் நலன், உணவு பாதுகாப்பு, ஏற்றுமதி திறன், துறை அலுவலர்களின் குடும்ப நலன் மற்றும் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, UATT 2.0 – அரசாணைகள் எண் 252 & 288 உடனடியாக முழுமையாக ரத்து செய்வதோடு, தோட்டக்கலை அலுவலர்களுக்கான அவசர இடமாற்ற ஆணைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், தோட்டக்கலைத் துறை அதன் தனித்துவம் மற்றும் துறைசார் நிபுணத்துவத்துடன் தனித்துறையாக தொடர வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: DMKprotestஅண்ணாமலை வலியுறுத்தல்The horticulture sector should continue as a separate sector with its uniqueness and sectoral expertise - Annamalai insistsதோட்டக்கலைத் துறை
Share
Tweet
SendShare
Previous Post

இது தான் திமுக அரசின் மதநல்லிணக்கமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

சீனிவாச ராமானுஜர் ஏன் கணித மேதை?

Related News

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies