தேர்தல் அறிக்கை நாடகக் கம்பெனி திவாலாகும் நாள் தொலைவிலில்லை - திமுகவை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!
Jul 31, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேர்தல் அறிக்கை நாடகக் கம்பெனி திவாலாகும் நாள் தொலைவிலில்லை – திமுகவை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 08:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் அறிக்கை நாடகக் கம்பெனி திவாலாகும் நாள் தொலைவிலில்லை என்று திமுக அரசை தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

முதல்வர் ஸ்டலினின் ஆட்சியில், ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் எனப் பலரும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தெருத்தெருவாகப் போராடிவரும் வேளையில், ஒய்யாரமாகக் குளிர்சாதன அறையில் அமர்ந்து, அடுத்த தேர்தலுக்கான அறிக்கையை திமுக தயாரிப்பது, ரோம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாகத் தான் இருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2021 திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளில் 400-க்கும் மேற்பட்டவை நிறைவேற்றப்படாத நிலையில், புதிய தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க வேண்டிய அவசியமென்ன? ஒரு வேளை நிறைவேற்றாமல் காற்றில் பறக்கவிட்ட வாக்குறுதிகளைக் கண்டுபிடித்து அதை வைத்தே மீண்டும் ஒரு அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்ட குழு இதுவோ? அல்லது, வேறென்னென்ன டுபாக்கூர் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்கள் காதில் பூ சுற்றலாம் எனத் திட்டமிடுவதற்கான குழு இதுவோ எனும் சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சரி, ஃபோட்டோஷூட் கூட்டத்தின் குறிக்கோள் எதுவாக இருந்தால் என்ன! எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்கள்தான்! ‘நாடு போற்றும் நல்லாட்சி’ என்னும் போர்வையில் வாக்குறுதியை வைத்து நாடகமாடும் திசைதிருப்பு கோஷ்டியின் கூடாரத்தைத் தமிழக மக்கள் கலைந்தெறியும் நாள் ஒன்றும் தொலைவில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjpDMKMK StalinElection manifesto: The day the theatre company goes bankrupt is not on TV - Nayinar Nagendran criticizes DMK
ShareTweetSendShare
Previous Post

பரிதாப நிலையில் தானியங்கி மஞ்சப்பை இயந்திரங்கள் – தமிழக அரசின் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் தோல்வி!

Next Post

அசாமில் திறக்கப்பட்ட “BAMBOO ORCHIDS” முனையம் : வட-கிழக்கு விமான சேவைகளுக்கு புதிய அத்தியாயம்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies