அதிமுக நிர்வாகிகளை நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு செல்லாது - எஸ். பி.வேலுமணி
Oct 18, 2026, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக நிர்வாகிகளை நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு செல்லாது – எஸ். பி.வேலுமணி

Ramamoorthy S by Ramamoorthy S
May 15, 2026, 01:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை அவர்களது பொறுப்புகளில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை செல்லாது என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆர், ஜெயலலிதாவால் கட்டி எழுப்பப்பட்ட அதிமுக என்ற எஃகு கோட்டை சிலரின் தனிப்பட்ட சுய லாபத்திற்காக அசைத்து பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை ஆராய அவசர பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும், முக்கியமாக திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று கூறியதால் பொதுச்செயலாளருடன் கருத்து வேறுபாடு தொடங்கியதாகவும் கூறியுள்ளனர்.

தம்மிடம் 17 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறி தற்காலிக சபாநாயகரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி மனு அளித்தன் விளைவாக பிளவு ஏற்பட்டது எனக்கூறியுள்ள அவர்கள், 30 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தரப்பு ஆதரவுக் கடிதத்தை தற்காலிக சபாநாயகரிடம் வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்து வேறுபாட்டுக்கு அச்சாரம் போட்டது எடப்பாடி பழனிசாமி என்றும், கட்சிக்காக அரும்பாடுப்பட்ட 28 பேரை ஒரே கையெழுத்தில் நீக்கி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை செல்லாது எனவும் கூறியுள்ளனர்.

தேர்தல் ஆணைய சட்டப்படியும், நீதிமன்ற சட்டப்படியும் அசாதாரண சூழலில் ஒருவரை நீக்கவோ அல்லது சேர்க்கவோ இரு பிரிவினருக்கும் அதிகாரம்
கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 28 பேரும் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளில் தொடர்ந்து நீடிப்பார்கள் என நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளனர்.
இதனிடையே, எக்ஸ் பக்கத்தில் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி கருத்து பதிவிட்டுள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் உண்மையை அறியாமல் அறிக்கை வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார உழைப்பை எந்த இடத்திலும் யாரும் மறுத்துப் பேசவில்லை எனக்கூறியுள்ள அவர், கூட்டணி குறித்தும், தேர்தல் செயல்பாடுகள் குறித்தும் யாரையும் கேட்டறியாமல் இபிஎஸ் தன்னிச்சையாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தோல்வி வந்த பிறகு தலைமை பொறுப்பில் இருப்பவர் இறங்கி வந்து எல்லோரிடமும் பேச முன்வந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மக்கள் ஆதரவு பெற்ற தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது என்ற அரசியல் அறத்தோடு ஆதரவை வழங்கியதாக கூறியுள்ள அவர்,
யாரையும் அவமரியாதை செய்யும் எண்ணமோ, கட்சியை பிரிக்கும் எண்ணமோ யாருக்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அழைத்தால் பேச தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார். தோல்விக்கான காரணங்களை அனைவரும் சேர்ந்து ஆராய்வோம் என்றும், அதிமுகவின் எதிர்காலப் பாதையை அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானிப்போம் எனவும் கூறியுள்ளார்.

Tags: AIADMK general secretary Edappadi PalaniswamiNatham Viswanathansp velumani
Share
Tweet
SendShare
Previous Post

அதிமுகவின் இரு அணிகளும் பலத்தை அதிகரிக்க முயற்சி – பேரத்தை உயர்த்தி வரும் எம்எல்ஏக்கள்!

Next Post

குதிரைப்பேர அரசியல் இல்லை என்பதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies