அழகு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் : காரணம் என்ன ? - சிறப்பு கட்டுரை!
Aug 5, 2026, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அழகு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் : காரணம் என்ன ? – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
May 21, 2026, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் ஸ்லீப்பர் செல்களை அமைப்பதற்காக ஸ்ரீநகரில் ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாதி, முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். யார் அந்த பயங்கரவாதி ? ஏன் Hair Transplant செய்தார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்குத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவளித்து வருகிறது. ஆப்ரேஷன் சிந்தூரில் தோல்வி அடைந்த பின்னும் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த பயங்கரவாதிகளை சட்டவிரோதமாக ஊடுருவ வைக்கிறது.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, லாகூரைச் சேர்ந்த ‘சைனீஸ்’ என்ற முகமது உஸ்மான் ஜட் என்ற பயங்கரவாதிக்குப் பயிற்சி அளித்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. இந்தியா முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும், ஸ்லீப்பர் செல் நெட்வொர்க்கை உருவாக்கவும் அவருக்கு திட்டம் வகுத்து கொடுக்கப் பட்டிருந்தது.

சட்ட விரோதமாக காஷ்மீருக்குள் நுழைந்த உஸ்மான் ஜட், அம்மாநிலத்தின் அமைதியான இயற்கை அழகு மற்றும் இந்திய மக்களின் இயல்பான வாழ்க்கையைக் கண்டு ஆச்சரியப்பட்டான்.

தனது திட்டத்தின் படி இந்தியாவில் ஸ்லீப்பர் செல்களை உருவாக்கிய உஸ்மான் ஜட், பல ஆண்டுகளாகவே கடுமையான முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்சனையால் பாதிக்கப் பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இஸ்லாமிய பயங்கரவாத பயிற்சி முகாம்களில் ஆழமாகப் போதிக்கப்பட்ட இந்து-இந்தியா விரோத கொள்கைப் பிடிப்பு உஸ்மான் ஜட்டிடம் பலவீனமடையத் தொடங்கியதால் இறுதியில், தனக்கு ஒதுக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல் திட்டங்களை நிறைவேற்றுவதை விட, தனது வழுக்கைத் தலைக்கு சிகிச்சை எடுக்கவே அதிக அக்கறை காட்டியுள்ளார்.

இதையடுத்து தனது பயங்கரவாத திட்டத்தை நிறுத்திவிட்டு, ஸ்ரீநகரில் உள்ள ஒரு கிளினிக்கில் முடி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில், ஸ்ரீநகர் காவல்துறையினரால் ஜட் கைது செய்யப்பட்டுள்ளார். இது போன்ற சம்பவங்களின் பின்னணி குறித்தும் NIA தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

தங்களை அடையாளம் காண முடியாதவாறு மாற்றிக்கொள்வதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் Hair Transplant உள்ளிட்ட Cosmetic மற்றும் Plastic சர்ஜரி போன்ற அழகுக்கான அறுவை சிகிச்சைகளை பயன்படுத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் பிரிவை அமைத்தவரும் கடந்த மார்ச் மாதத்தில் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டவருமான ஷபீர் அகமது லோன், குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பல் மாற்று சிகிச்சையும் செய்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது.

காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத்தைத் தூண்டும் வகையில் போஸ்டர் ஒட்டியதாகக் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆட்சேர்த்த குழுவைச் சேர்ந்தவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையின் தொடர்ச்சியாக லோன் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

விசித்திரமாகவோ தற்செயலாகவோ தோன்றினாலும்,பயங்கரவாதிகளுக்கு அழகு சிகிச்சைகளில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு பிடிபடாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது தோற்றத்தை மாற்றிய சாஜித் மிர் என்பவரிடமிருந்து இத்தகைய உத்தியை பயங்கரவாதிகள் கடைப்பிடிக்க தொடங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பயங்கரவாத தோற்றத்தை மாற்றுவதற்கும், புதிய அடையாளங்களை ஏற்றுக்கொள்வதற்கும், சர்வதேச சட்ட அமலாக்க அமைப்புகளிடமிருந்து தப்பிப்பதற்கும் அழகு சிகிச்சை என்பது திட்டமிட்ட செயலாகவே இருக்கலாம் என்றும் புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சர்வதேச போக்குவரத்து மையங்களில் பயன்படுத்தப்படும் AI மற்றும் பயோமெட்ரிக் முக அங்கீகார மென்பொருளையே பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை குழுவினர் பெரிதும் சார்ந்துள்ளனர்.

அதாவது வெறும் புகைப்படத்தை மட்டும் பார்க்காமல் ஒரு நபரின் கண்கள், மூக்கு, தாடை புருவம் மற்றும் நெற்றியின் எல்லை ஆகியவற்றுக்கு இடையேயான துல்லியமான, நிலையான அளவுகளைக் கண்காணித்து வரைபடமாக்குகின்றன.

எனவே தேடப்படும் குற்றவாளிகளும், பிடிபடாமல் இருக்க எச்சரிக்கையாக இருக்கும் பயங்கரவாதிகளும் முகத்தில் தங்களின் முக்கிய அடையாளப் புள்ளிகளை மாற்றியமைப்பது, அந்தப் பயங்கரவாதிகள் உயிர் பிழைப்பதற்கான ஒரு முக்கிய விஷயமாக உள்ளது.

எனவே விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள NIA யின் குற்றப் பத்திரிகை ஆவணங்களுடன் பயங்கரவாதிகளின் அழகு சிகிச்சை மோகம் பற்றியும் ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Tags: sleeper cellsLashkar-e-Taiba organizationhair transplant surgery.Indiapakistancross-border terrorism
ShareTweetSendShare
Previous Post

பி.எல். சந்தோஷ் தலைமையில் கோவையில் நடைபெற்ற பாஜக உயர்மட்ட கூட்டம் – முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!

Next Post

திமுக ஆட்சியை போல தவெக ஆட்சியிலும் வன்முறை தொடர்கிறது – சீமான் குற்றச்சாட்டு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies