அந்த நிறுவனத்தை நம்பியதால் மோசம் - கள ஆய்வில் குமுறிய திமுக தொண்டர்கள் - சிறப்பு தொகுப்பு!
Sep 1, 2026, 04:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அந்த நிறுவனத்தை நம்பியதால் மோசம் – கள ஆய்வில் குமுறிய திமுக தொண்டர்கள் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 1, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்டமன்றத் தேர்தலின் தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவில் பென் நிறுவனத்தை நம்பியதே மிகப்பெரிய தவறு என திமுக தொண்டர்கள் குமுறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கருத்துக்களை பதிவு செய்ய உருவாக்கப்பட்ட இணையப்பக்கத்திலும் தொண்டர்கள் பதிவு செய்யும் புகார் கட்சித் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் வெற்றி பெற்று திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து புதிய சாதனையை படைப்போம் என முழங்கிக் கொண்டிருந்த திமுக படுதோல்வியை சந்தித்திருக்கிறது.

திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தோல்வியை சந்தித்துள்ளனர். பெரியண்ணன் தொணியில் செயல்பட்ட அமைச்சர்கள், தொண்டர்களை மதிக்காத கட்சித் தலைமை என அடுக்கான புகார்கள், தோல்விக்கான காரணங்களாக முன்வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை புரிந்து கொண்டு கட்சியை மேம்படுத்த அடிமட்டத் தொண்டர்கள் தங்களின் கருத்துக்களை தெரியப்படுத்த உடன்பிறப்புகள் எனும் இணையப்பக்கத்தை திமுக தலைமை தொடங்கியது.

தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களின் கருத்துக்களை உடன்பிறப்புகள் இணையப்பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

அதில் ஏராளாமானோர் கட்சித் தொண்டர்களின் உழைப்புக்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்காமல், பென் எனும் வியூக நிறுவனத்தை முழுமையாக நம்பி தேர்தலை சந்தித்ததே தோல்விக்கான காரணம் என தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.

அதோடு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக சென்று கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து அங்குள்ள பிரச்னைகள் குறித்தும், காரணங்கள் பற்றியும் கேட்டறிய அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவும் தங்களின் ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த குழு ஆய்வின் போது யாரும் எந்த தகவலையும் மறைக்காமல் உண்மையை கூற வேண்டும் எனவும், அப்போது தான் கட்சியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியதற்கு ஏற்ப நிர்வாகிகள் பலர் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்.

அதில் அமைச்சர்கள் எனும் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும் என உத்தரவு பிறப்பிப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்த மூத்த நிர்வாகிகள் தான் தோல்விக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பென் நிறுவனத்தினர் கள ஆய்வு எனும் பெயரிலும், சர்வே எனும் பெயரில் பெரிய அளவில் மோசடி செய்திருப்பதாகவும், களத்தின் உண்மை நிலவரத்தை கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தாமல் மறைத்துவிட்டு, தங்களுக்கு சாதகமான அறிக்கையை மட்டுமே வழங்கியிருப்பதாகவும் தொண்டர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

மற்ற நிர்வாகிகளின் தோல்வியை ஏற்றுக் கொண்டாலும் கூட கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்விக்கான உண்மையான காரணங்களை ஆராயும் போது அப்பகுதி நிர்வாகிகள் அனைவரின் புகாரும் சேகர்பாபுவின் மீதே திரும்பியுள்ளது.

சென்னையின் முதலமைச்சராக தன்னை நிறுத்திக் கொண்ட சேகர்பாபு, தன்னை மீறி என்ன நடக்கும் என்ற ஆணவத்தில் செயல்பட்டதே மு.க.ஸ்டாலினின் தோல்விக்கு காரணம் எனவும் நிர்வாகிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்கு முன்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எந்தெந்த தொகுதிகளில் திமுக தோற்கிறதோ அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதன் படி கொளத்தூர் தொகுதியின் மாவட்டச் செயலாளராக இருக்கும் சேகர்பாபுவின் பதவியை பறிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் அளித்திருக்கும் புகார் மீது கூடுதல் கவனம் செலுத்துவதோடு, பென் நிறுவனத்தின் நாடக வேலைக்கு துணைபோகாமல் உண்மையான தொண்டர்களின் உணர்வுக்கும், உழைப்புக்கும் மதிப்பளிக்க வேண்டும் என திமுக அனைவரும் குமுறியுள்ளனர்.

Tags: ANNA ARIVALAYAMtamil nadu assembly election 2026DMK cadresDMK LOSTpen concernudyaanithiDMKMK StalinTamil Nadu Assembly elections.
Share
Tweet
SendShare
Previous Post

தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டம்!

Next Post

ஆச்சரியக்குறி தனமாக விஜய் பேசியுள்ளார்; அதிமுக பதிலடி

Related News

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies