கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்
Aug 5, 2026, 04:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 11, 2026, 10:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோட்டார் பம்பு செட்டுகளுக்கு தேவையான மும்முனை மின்சாரம் கிடைக்காததால், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெற்பயிர்கள் காய்ந்து சருகாகும் நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  இந்த ஆண்டிற்கான குறுவை சாகுபடி பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து இதுவரை நீர் திறந்துவிடப்படாத காரணத்தால், நடவு செய்த நெற்பயிர்களைக் காப்பாற்ற மோட்டார் பம்ப் செட்களையே பெரும்பாலான டெல்டா விவசாயிகள் நம்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், தவெக ஆட்சியில் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களால், மும்முனை மின்சாரம் கிடைக்காமல் மோட்டார் பம்ப் செட்கள் எல்லாம் முடங்கிப் போய் கிடப்பது, தழைந்து வரும் நெற்பயிர்களையும், உழைத்துக் களைத்த விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தையும் ஒருசேர பாழாக்கி விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எனவே, சாதாரண பொதுமக்கள் முதல் நாட்டின் முக்கியத் தொழில்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்தத் தொடர் மின்வெட்டு பிரச்சனையை, முதல்வர் விஜய்  இனியும் அலட்சியமாகக் கையாளக் கூடாது என கூறியுள்ளார்.

“உபகரணங்கள் திருடுபோய்விட்டன, ஊரறிய புகார் கொடுத்துள்ளோம்” என்ற உப்புச்சப்பில்லாத காரணங்களைக் கூறி கடமையைத் தட்டிக் கழிக்காமல், தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு முடுக்கிவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மேட்டூர் அணையில் இருந்து இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதுவரை மோட்டார் பம்ப் செட்கள் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்க முன்வர வேண்டும். திமுக அரசைப் போல தவெக அரசும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து விடக் கூடாது என்பதை முதல்வருக்கு கோரிக்கையாகவே முன்வைக்கிறேன் என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags: nainar nagendran interviewBJP State President Nainar Nagendran nainar nagendran on epspwer cutVijaytvkNainar Nagendran speechnainar nagendran statement
ShareTweetSendShare
Previous Post

இயக்குநர் பாரதிராஜா மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது – பிரதமர் மோடி

Next Post

சட்டசபையில் எப்படி பேசுவது? : சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வரும் உதயநிதி!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies