திமுக அரசின் தவறுகளை காரணம் காட்டி, தவெக அரசும் மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது - நயினார் நாகேந்திரன்
Sep 20, 2026, 12:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசின் தவறுகளை காரணம் காட்டி, தவெக அரசும் மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 19, 2026, 04:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக அரசின் தவறுகளைக் காரணம் காட்டி, தவெக அரசும் மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது  என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு “வெள்ளை அறிக்கை” என்ற பெயரில் நிதியமைச்சர் மரிய வில்சன்  வெறும் கடன் பத்திரத்தை மட்டுமே வாசித்திருந்த நிலையில், தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதிகள் குறித்து சட்டமன்ற உரையில் நீங்களும் இதுவரை ஒரு வார்த்தைக் கூட பேசாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என தெரிவித்துள்ளார்.

கடனைக் காரணம் காட்டி கொடுத்த வாக்குறுதிகளைக் கிடப்பில் போடுவதற்கு நீங்கள் திட்டம் தீட்டுகிறீர்களோ எனத் தோன்றுகிறது.

காரணம், கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தின் பொருளாதாரத்தை திமுக எப்படியெல்லாம் சிதைத்து, மக்களின் தோள்களின் மீது கடன் சுமையைக் கூட்டி வைத்திருந்தது என்பது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்றைக்கு வந்த தவெக புலனாய்வு செய்து இதைப் புதிதாகக் கண்டுபிடித்து விடவில்லை. பல அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வந்த வெட்ட வெளிச்சமான விஷயம். இவ்வளவு ஏன், தேர்தல் பிரச்சாரத்தின் போது, இதே பொருளாதாரக் கடனைச் சுட்டிக் காட்டி திமுகவை விமர்சித்தவர் தானே நீங்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம் கடன் சுமையில் தவிக்கிறது என்று தெரிந்தும் கூட, முழுக்க முழுக்க பணபலத்தை மட்டுமே மையமாகக் கொண்ட திருமணத்திற்கு ஒரு பவுன், குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாதம் ரூ. 2500 மகளிர் உதவித்தொகை, பட்டதாரிகளுக்கு ரூ. 4000 நிதியுதவி, பயிர்க்கடன் முழுவதுமான தள்ளுபடி என இத்தனை வாக்குறுதிகளை எதற்கு வாரி இறைத்தீர்கள்? மாற்றம் தருவோம் என மேடைக்கு மேடை எதற்கு முழங்கினீர்கள்? என்றும் அவர் கூறியுள்ளார்

நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நம்பித் தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் முதல்வரே, திமுக விட்டுச் சென்ற கடனைக் காரணம் காட்டி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் நீங்கள் ஏதேனும் சமரசம் செய்ய முயன்றால், அதை பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்..

Tags: nainar nagendran interviewWhite PaperBJP State President Nainar Nagendran nainar nagendran on epsmaria wilsonnainar nagendran press meetVijaytvkNainar Nagendran speechnainar nagendran statement
Share
Tweet
SendShare
Previous Post

யோகா செய்வதால் என்ன நன்மை? – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விளக்கம்!

Next Post

மேகதாது தனித்தீர்மானம் – திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies