மேகதாது தனித்தீர்மானம் - திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு!
Sep 20, 2026, 12:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேகதாது தனித்தீர்மானம் – திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 19, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

சட்டப்பேரவையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பான தனி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார், முதலமைச்சர் முன்மொழிந்துள்ள அரசினர் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி முழு மனதோடு ஆதரிப்பதாக தெரிவித்தார்.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது கண்டிக்கத்தது என்றும், தமிழகத்திற்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய நீரை முறைப்படி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என ராஜேஷ்குமார் தெரிவித்தார்

இதனை தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினரும், அமைச்சருமான வன்னி அரசு, தமிழ்நாட்டின் உரிமை என்ற அடிப்படையில் முதலமைச்சர் கொண்டு வந்துள்ள தீர்மானம், வரலாற்று சிறப்புமிக்க முன்மொழிவு என தெரிவித்தார். மேலும், தமிழர் உரிமை காக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு விசிக என்றைக்கும் உடன் நிற்கும் என கூறினார்.

முதலமைச்சரின் தனி தீர்மானத்தை ஆதரித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராஜேந்திரன், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என தெரிவித்தார். மேலும், தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கருத்துக்களை கேட்டறிந்து பிரதமர், நீர்வள அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனை அடுத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் செல்லசுவாமி, மேகதாது அணைக்கு எதிரான தனித் தீர்மானத்திற்கு சிபிஎம் கட்சி ஆதரவு அளிக்கிறது என தெரிவித்தார். மேலும், நீதிமன்ற தீர்ப்பை ஏற்காமல் கர்நாடக அரசின் அணைக் கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags: tn Legislative Assemblycm vijayMekedatu dam issue.karnatakaDMKCongressaiadmk
Share
Tweet
SendShare
Previous Post

திமுக அரசின் தவறுகளை காரணம் காட்டி, தவெக அரசும் மக்கள் நலனில் பாரபட்சம் காட்டக் கூடாது – நயினார் நாகேந்திரன்

Next Post

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? சிறப்பு தொகுப்பு!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies