இஸ்ரேலால் குறிவைக்கப்பட்ட பாகிஸ்தானின் அசிம் முனீர் : மொசாத் சதி திட்டம் தோல்வி, நடந்தது என்ன? - சிறப்பு கட்டுரை!
Sep 27, 2026, 11:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலால் குறிவைக்கப்பட்ட பாகிஸ்தானின் அசிம் முனீர் : மொசாத் சதி திட்டம் தோல்வி, நடந்தது என்ன? – சிறப்பு கட்டுரை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2026, 04:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீரைக் கொலை செய்ய இஸ்ரேல் சதித் திட்டம் தீட்டியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை, ஒரு சர்வதேச படுகொலைக்கான களமாக அமைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்தச் சதித்திட்டம் குறித்த தகவலை பிரேசிலைச் சேர்ந்த புவிசார் அரசியல் ஆய்வாளர் பெப்பே எஸ்கோபர் தெரிவித்துள்ளார்.

பிரபல அரசியல் விமர்சகர் மரியோ நௌஃபால் தொகுத்து வழங்கிய ஒரு பாட்காஸ்டில் கலந்து கொண்ட பெப்பே எஸ்கோபர், மிக சாதாரணமாக இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.

100 நாட்களுக்கும் மேலாக நடந்த ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும், ஈரானும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. இறுதியில் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருநாடுகளும் மத்தியஸ்ராக உள்ள பாகிஸ்தான் முன்னிலையில் கையெழுத்திட்டன.

மேலும் 60 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த இருநாடுகளும் சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம் முதல் கட்டப் பேச்சுவார்தைகளில் ஈடுபட்டு முக்கிய முடிவுகளை ஒப்புக் கொண்டனர். ‘

இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அந்நாட்டின் இராணுவத் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் உட்பட அந்நாட்டின் தூதுக் குழுவினரும் சுவிட்சர்லாந்து சென்றிருந்தனர்.

ஈரான், அமெரிக்கா இடையே முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் தூதுக்குழுக்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள பர்கன்ஸ்டாக் ரிசார்ட்டில் தங்கி இருந்தன.

இந்நிலையில் பாகிஸ்தான் இராணுவத் தலைமை தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் மற்றும் பாகிஸ்தான் தூதுக்குழுவின் மற்ற உறுப்பினர்களையும் சுவிட்சர்லாந்தில் வைத்து படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உத்தரவின் பேரில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் தீட்டிருந்த சதித் திட்டம் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திற்கு மிகவும் நம்பகமான தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இஸ்ரேலின் படுகொலை சதித் திட்டத்தை முறியடித்த பாகிஸ்தான் உளவுத் துறை, ஓமனில் உள்ள இடைத்தரகர்கள் மூலமாக தங்கள் தூதுக்குழுவை நீங்கள் தொட்டால், உங்களை வரைபடத்திலிருந்தே துடைத்தெறிவோம், அவ்வளவுதான்.” என்ற கடுமையான எச்சரிக்கையை இஸ்ரேலுக்கு அனுப்பியதாக பெப்பே எஸ்கோபர் கூறியுள்ளார்.

தனது குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரத்தையும் வெளியிடாத பெப்பே எஸ்கோபரின் தகவல்களை பாகிஸ்தான், இஸ்ரேல், சுவிட்சர்லாந்து ஓமன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை.

ஆனாலும் அசிம் முனீரைக் கொல்ல சதி என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய உடனேயே ஒரு மூத்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி முற்றிலுமாக இந்தச் செய்தியை நிராகரித்ததாகவும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் சையத் ஆசிம் முனீர் ஆகியோரின் சுவிட்சர்லாந்து பயணம் எந்தவித இடையூறும் இன்றி “கடிகார முள் போல சீராக” நடைபெற்றது என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: SwitzerlandPakistan's Army ChiefField Marshal Asim Munir.IndiapakistanIsraelUnited States
Share
Tweet
SendShare
Previous Post

ஆதாரங்கள் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் சோதனை – அமைச்சர் ராஜ்மோகன்

Next Post

காவிரி – கோதாவரி இணைப்பு பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – அன்புமணி வேண்டுகோள்!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies