வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு - சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 04:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 26, 2026, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா வேண்டுமென்றே வெள்ளத்தை ஏற்படுத்துவதாக பாகிஸ்தான் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைகளுக்கு முரணானவை என்று இந்தியா மறுத்துள்ளது. தீவிர பருவமழையின் நேரடி விளைவாகவே செனாப் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் இந்தியா விளக்கமளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தங்கள் நாட்டில் எது நடந்தாலும் எதற்கெடுத்தாலும் இந்தியாவை நோக்கி கை நீட்டுவது பாகிஸ்தானின் வழக்கமாகவே உள்ளது.

தற்போது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிகுக்கு இந்தியா திட்டமிட்டு நீரைத் திறந்து விட்டதே காரணம் என்ற குற்றச் சாட்டை பாகிஸ்தான் வைத்துள்ளது.

வெள்ளப்பெருக்கிற்கு புது தில்லியே காரணம் என பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகளை இந்தியா மறுத்துள்ளது.

பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்று மறுத்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால், செனாப் நதியின் நீர்மட்டம் அதிகரித்ததற்கு பருவமழைக் காலத்தில் பெய்த கனமழையே காரணம் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த ஜூலை 20ம் தேதி முதல் 23 தேதி வரை ஜம்மு மற்றும் அதை ஒட்டிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தீவிர பருவமழையின் நேரடி விளைவாகவே செனாப் நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கடந்த ஜூலை 22 ம் தேதி பாகிஸ்தானின் வானிலை ஆய்வு மையம் கனமழை மற்றும் வெள்ள அபாயம் குறித்தும் முனனெச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆதாரத்துடன் பாகிஸ்தானின் குற்றசாட்டுகளை மறுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் வெள்ளம் குறித்த முன் எச்சரிக்கைகளைப் பாகிஸ்தானுக்கு அனுப்பத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார்.

அதே நேரம் மனிதாபிமான அடிப்படையில் முக்கியத் தரவுகளைப் பாகிஸ்தானுடன் பகிர்வதில் இந்தியா உறுதியாக உள்ளதாக கூறியுள்ள ஜெயஸ்வால், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக ஆசியான் மன்றத்தில் பாகிஸ்தான் தெரிவித்த கருத்துக்களுக்கும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடன் நிரந்தரமாக நிறுத்தாத வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

எந்த வகையிலும் சீனாவின் இறையாண்மையை இந்தியா மீறாத நிலையில் 1963ஆம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள இந்திய பகுதிகளைச் சட்டவிரோதமாக சீனா ஆக்கிரமித்துள்ளது என்று குறிப்பிட்ட ஜெயஸ்வால் அப்பகுதிகளில் சீனாவின் உள்கட்டமைப்புத் திட்டங்ககளை இந்தியா தொடர்ந்து எதிர்க்கும் என்றும் கூறியுள்ளார்,

Tags: Randhir JaiswalChenab river.indus water treadyindus water flow stoppedIndiapakistanwater flow
ShareTweetSendShare
Previous Post

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

Next Post

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies