ஊழல் கோப்புகளை முதலமைச்சர் ஏன் திறக்கவில்லை? - உதயநிதி கேள்வி!
Oct 7, 2026, 11:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் கோப்புகளை முதலமைச்சர் ஏன் திறக்கவில்லை? – உதயநிதி கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 21, 2026, 01:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழல் கோப்புகளை முதலமைச்சர் ஏன் திறக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவையை பேரவைத் தலைவர் சிறப்பாக நடத்துவதாகவும், எதிர்க்கட்சிக்கும் வாய்ப்பு வழங்குவதாகவும், ஆனால் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் உதயநிதி கூறினார்.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆளுங்கட்சி அமைச்சர்கள் பேசியவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி பேரவைத் தலைவர் வரலாறு படைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அவைக்குறிப்பிலிருந்து நீக்கினாலும், அனைத்தும் நேரலையில் சென்று விடுவதாகக் கூறிய அவர், முதலமைச்சர் ஊழல் கோப்புகளை எப்போது திறப்பார் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எ.வ.வேலு கூறியதைப் போல, மிசாவை பார்த்தது திமுகதான் என்றும், அப்படிப்பட்ட இயக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்று, தவெக என்றால் என்ன என்பதை இந்தத் தேர்தலில் காட்டியுள்ளதாகவும் கூறினார். மேலும், இத்தனை ஆண்டுகளாக சட்டப்பேரவை நிகழ்வுகளை ஏன் நேரலை செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து, ஜோதிடம் பார்த்து மஞ்சள் துண்டு அணிந்தவர்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் காரசாரமாகப் பதிலளித்தார்.

ஊழல் கோப்புகள் தயாராக இருப்பதாகத்தான் முதலமைச்சர் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் பேச்சுக்கு பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ஊழல் கோப்புகளைத் திறக்க வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை முதலமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார் என தெரிவித்தார்.

 

Tags: AssemblytvkOpposition Leader UdhayanidhiASSEMBELY
Share
Tweet
SendShare
Previous Post

திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய நாஞ்சில் சம்பத்; சேரை வீசி தாக்கிய திமுகவினர்

Next Post

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பு இல்லை : அமைச்சர் ராஜீவ் விளக்கம்!

Related News

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு வாழ்த்து!

ராகுல்காந்தி நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கிரண் ரிஜிஜூ

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை; மத்திய அரசு தகவல்

மான நஷ்ட வழக்கிற்கு எதிர்ப்பு; அமைச்சர்கள் மேல்முறையீடு

Load More

அண்மைச் செய்திகள்

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்; முதலமைச்சர் விஜய்

பைக்ரேஸ் விதிமீறல்; 2,000 பைக்குகளை பறிமுதல் செய்ததாக காவல்துறை தகவல்

டாஸ்மாக் ஊழியர்களை விசாரணையின்றி நீக்க கூடாது; உயர்நீதிமன்றம்

ஈரானால் ஒரு சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்; சர்வதேச அணுசக்தி முகமை தகவல்

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies