டெல்லியில் அதிகரித்து வரும் ஸ்வைன் காய்ச்சலின் தாக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தலைமையில் அவரது இல்லத்தில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.
இதில், டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள், பரிசோதனைக் கருவிகள், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் தீவிர கண்காணிப்பு முறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
















