மிசா குறித்து முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசிய நிலையில், தன்னை யார் கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தேர்தல் பரப்புரையின் போது கடுமையாக விமர்சித்ததற்கு சாரி என்று என்னிடம் கூறினீர்களே? என்றும், “வீட்டில் என்னை சந்தித்தபோது நான் சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? என்றும் வினவியுள்ளார்.
மிசா கைதின் போது காவலர்கள் தாக்கியதில் எனது தாடை எலும்பு உடைந்தது உண்மை தான் என்றும், “காவலர்கள் தாக்கியதில் எனது அருமை அண்ணன் சிட்டிபாபு இறந்தார்; எனது தாடை எலும்பு உடைந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
“சந்தேகம் இருந்தால் சட்டமன்றத்தில் உள்ள நூலகத்திற்குச் சென்று எனது போராட்ட வரலாற்றை படித்து பாருங்கள் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
















