நான்கு மாதங்களில் நல்லாட்சி வழங்கியிருந்தால், முதலமைச்சர் இவ்வளவு தீவிரமாக இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என பாஜக மாநில மகளிரணி தலைவர் கவிதா ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
திருவொற்றியூரில் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை பாராட்டி, பாஜக மகளிரணி சார்பில் ரங்கோலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமரின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கவிதா ஸ்ரீகாந்த், தூய ஆட்சி தருவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்தவுடன் இடைத்தேர்தலை சந்தித்துள்ளதாக விமர்சித்தார். மேலும், நான்கு மாதங்களில் நல்லாட்சி வழங்கியிருந்தால், முதலமைச்சர் இவ்வளவு தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும் தெரிவித்தார்.
















