சென்னையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடியும், முதலமைச்சர் விஜயும் இணைந்து நாளை தொடங்கி வைக்கவுள்ளனர்.
இதையடுத்து இருவரும் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து, பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை பூந்தமல்லி முதல் போரூர் வரை ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள நிலையில்,
மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், போரூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் நாளை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகளைப் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிரதமர் மற்றும் முதலமைச்சர் பயணிக்கும் பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினர் ஒத்திகை நடத்தினர்.
















