பெண்களுக்கு பாதுகாப்பற்ற திமுக ஆட்சி ஒழிய வேண்டும் : நயினார் நாகேந்திரன்
Jul 31, 2026, 02:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண்களுக்கு பாதுகாப்பற்ற திமுக ஆட்சி ஒழிய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாகவும் குற்றவாளிகளின் கூடாரமாகவும் தமிழகத்தை மாற்றியது தான் திமுக அரசின் முக்கிய சாதனை என்று தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சதீஷ் என்பவர் அரிவாளைக் காட்டி மிரட்டி இளம்பெண் ஒருவரைக் காரில் கடத்த முயன்றதாக வெளியாகியுள்ள காணொளி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.

திமுக நிர்வாகியின் மகன் என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி சதீஷ் அப்பெண்ணைத் தனது ஆசைக்கு இணங்க அழைத்ததாகவும், இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக அப்பெண் பிரிந்து விட்டதாகவும் பலவாறான தகவல்கள் வெளிவந்தாலும் கூட, பொதுவெளியில் பகிரங்கமாக ஒரு பெண்ணை ஆயுதம் காட்டி மிரட்டும் ஆணவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய கொடூர மனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. திமுகவினரின் கட்டளைகளை நிறைவேற்றும் கைக்கூலிகளாக காவல்துறையினர் மாறிவிட்டதன் விளைவு தான்  திமுக
ஆட்சியில் குற்றங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.

உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட தமிழகக் காவல்துறைக்குத் தலைமையை நியமிக்க மறுக்கும் முதல்வரின் அலட்சியத்தால் தான் குற்றவாளிகள் எல்லாம் கொழுப்பெடுத்துப் போய்த் திரிகின்றனர்.

இப்படிப் பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாகவும் குற்றவாளிகளின் கூடாரமாகவும் தமிழகத்தை மாற்றியது தான் திமுக அரசின் முக்கிய சாதனை. இப்பேற்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்! பெண்களின் பாதுகாப்பும் மக்களின் நிம்மதியும் சமூகத்தின் அமைதியும் தமிழகத்தில் நிலைநாட்டப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: DMKMK Stalinநயினார் நாகேந்திரன்The DMK regime that is unsafe for women must end: Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

‘டிட்வா’ புயல் காரணமாக பாம்பனில் கடல் சீற்றம் – 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

Next Post

நாட்டின் முதல் தனியார் ராக்கெட் “விக்ரம்-1” : விண்வெளித் துறையில் புதிய வரலாறு படைத்த இந்தியா…!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies