முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழியை கைது செய்ய வலியுறுத்தி சென்னை அண்ணாநகர் எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடையாறு சாஸ்திரி நகரில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தில் எஸ்பிஐ வங்கி கிளை இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் கடந்த 20-ம் தேதி அன்று லிஃப்ட் பழுதானது. இதனால் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் அவதி அடைந்ததால் வங்கியின் கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங், கயல்விழியின் உதவியாளரை தொடர்பு கொண்டு கண்டித்தார்.
இதைத்தொடர்ந்து வங்கிக்கு வந்த கயல்விழி , ஆத்திரத்தில் வங்கி மேலாளர் ஹர்ஷீன் சிங்கின் கன்னத்தில் அறைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், கயல்விழியை கைது செய்ய வலியுறுத்தி அண்ணாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கி கிளை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















