விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி 75 ஆயிரம் விவசாயிகளின் பயிர்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக 5 ஆயிரத்து 932 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 23 ஆயிரத்து 357 கோடி ரூபாயும், கூட்டுறவுத் துறைக்கு 8 ஆயிரத்து 28 கோடி ரூபாயும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு 14 ஆயிரத்து 984 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பயிர்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 75 ஆயிரம் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மொத்தம் 5 ஆயிரத்து 932 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் “வழிகாட்டி 3.0” திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு நகரமான “அறிவகம்” அமைக்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
“அனைவருக்கும் தரமான வீடு” திட்டத்திற்கு, ஆயிரத்து 253 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 14 ஆயிரத்து 194 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
மேலும், 24 ஆயிரத்து 131 குடியிருப்புகள் இந்த ஆண்டில் முடிக்கப்படும் என்றும், தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம் அமைக்க 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
















