நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? - சிறப்பு தொகுப்பு!
Oct 6, 2026, 11:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டை சீர்குலைக்க நடந்த சதி முறியடிப்பு : பாகிஸ்தான் கைக்கூலியான Shehzad Bhatti நெட்வொர்க் அழிக்கப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 22, 2026, 07:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் 80வது சுதந்திர தினத்துக்கு முன்னதாக நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் ISI ஆதரவு பெற்ற ஷெசாத் பட்டி நெட்வொர்க்கைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பிரதமர் மோடியின் தலைமையில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக zero-tolerance கொள்கையை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நடத்தப்பட்ட அதிரடி தடுப்பு நடவடிக்கைகளில் SBN என்ற ஷெசாத் பட்டி நெட்வொர்க்கைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஷெசாத் பட்டி நெட்வொர்க்’ என்பது பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட, பாகிஸ்தான் உளவுத் துறையான ISI யின் ஆதரவுடன் செயல்படும் ஒரு பயங்கரவாதக் குழுவாகும்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹாவல் நகரின் ‘கிறிஸ்டியன் குவாட்டர்’ பகுதியைச் சேர்ந்த Shehzad Bhatti ஒரு பாகிஸ்தான் கேங்ஸ்டர்.

பஞ்சாபின் ராவல்பிண்டியில் ஃபருக் கோக்கரின் (Farrukh Khokhar) குற்றக் கும்பலுடன் இணைந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்தார் Shehzad Bhatti. பாகிஸ்தான் காவல்துறையால் தேடப்பட்ட Bhatti 2015-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தப்பிச் சென்றார்.

பிறகு இந்தியாவிற்கு எதிராக – குறிப்பாக எல்லை மாநிலங்களில் – குறைந்த செலவிலான, சிறிய அளவிலான போரைத் தொடர்ந்து நடத்துவதற்கு ISI -க்கு கைக்கூலியாக Shehzad Bhatti தன்னை மாற்றிக்கொண்டார்.

போர்ச்சுகல், மெக்ஸிகோ என தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்ட Bhatti தற்போது பிரேசிலில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், போர்ச்சுகலில் இருந்தபோது சிறையில் அடைக்கப்பட்டிருந்த தாதா லாரன்ஸ் பிஷ்னோய் (Lawrence Bishnoi) தன்னைத் தாக்கத் திட்டமிட்டதாகக் கூறி Bhatti வெளியிட்ட காணொளி வைரலானது .

Bhatti-யின் தூண்டுதலின் பேரில் இந்தியாவில் பல பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் கண்டு பிடித்துள்ளன. மேலும் ‘காலிஸ்தான் விடுதலைப் படை’ (Khalistan Liberation Army) ‘தெஹ்ரீக்-ஏ-தலிபான் ஹிந்துஸ்தான்’ என பல சிறு சிறு பயங்கரவாத குழுக்கள் Bhatti கீழ் செயல்பட்டுவருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

காவல் துறை, பாதுகாப்பு மற்றும் மத வழிபாட்டுத் தலங்களைக் கண்காணிக்கவும் (reccé), உளவு பார்ப்பதற்காக CCTV கேமராக்களைப் பொருத்தவும் குறிப்பிட்ட இந்திய மாநிலங்களில் உள்ளூர் நபர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த பயங்கரவாத நெட்வொர்க் பணம் வழங்கி வருகிறது.

நாட்டின் 80 வது சுதந்திர தினத்தில் இடையூறுகள் செய்வதற்காக இந்த பயங்கரவாத நெட்வொர்க்-கால் திட்டமிடப்பட்ட சதிகள் வெற்றிகரமாக முறியடிக்கப் பட்டுள்ளன.

மாநிலக் காவல் படைகளுடன் நிகழ்நேர உளவுத்துறை அளித்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 12 ம் தேதி பல மாநிலங்களில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் விளைவாக 14 மாநிலங்களில் ஷெசாத் பட்டி நெட்வொர்க்-குடன் தொடர்புடைய அனைத்து செயல்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தாக்குதல் சதி திட்டங்கள் முறியடிக்கப் பட்டு இந்த நெட்வொர்க் முற்றிலுமாகச் சிதைக்கப் பட்டுள்ளது.

இந்த வேட்டையில் உத்தரப் பிரதேசத்தில் 62 பேரும் ஹரியானாவில் 52 பேரும், டெல்லியில் 51 பேரும், பஞ்சாப்பில் 44 பேரும் ராஜஸ்தானில் 15 பேரும், மகாராஷ்டிராவில் 8 பேரும், உத்தரகண்ட்டில் 5 பேரும், கர்நாடகா, குஜராத் மற்றும் பீகாரில் தலா 3 பேரும் மற்றும் தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் கேரளாவில் தலா 2 பேரும் என 14 மாநிலங்களில் சுமார் 253 பேர் பிடிபட்டுள்ளனர்.

ISI நிதியுதவி பெற்ற improvised explosive devices , பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலை முத்திரைகள் கொண்ட கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் உளவு பார்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட CCTV கேமராக்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. இவை எல்லாம் இந்த பயங்கரவாத குழுவுக்கு ISI உடனான நேரடி தொடர்புகளை உறுதிப்படுத்தியுள்ளன.

UAPA, BNS, ஆயுதச் சட்டம், NDPS சட்டம் மற்றும் வெடிபொருள் பொருட்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த பயங்கரவாத நெட்வொர்க்-க்கு எதிராக 80-க்கும் மேற்பட்ட FIR-கள் பதிவு செய்யப்பட்டு, 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக டெல்லி மற்றும் கர்நாடகாவில் புதிய FIR-கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது எக்ஸ் பக்கத்தில் சுதந்திர தினத்திற்கு முன்னதாக, ISI ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுவான ஷெசாத் பட்டி நெட்வொர்க்-கை பிரதமர் மோடி அரசு அழித்துள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மத்திய அரசு சற்றும் சகித்துக்கொள்ளாது என்றும், நாடு முழுவதும் பயங்கரவாத நெட்வொர்க்களைத் தகர்ப்பதற்கான பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாகிஸ்தான் கைக் கூலியான கேங்ஸ்டர் Shehzad Bhattiயின் நெட்வொர்க்கை முற்றிலுமாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தகர்த்துள்ளன.

 

Tags: isicross-border terrorismPakistan's intelligence agencyPakistan-ISI-backed 'Shehzad Bhatti Network'counter-terrorism operationsIndiapakistanindependence day
Share
Tweet
SendShare
Previous Post

திமுக நிர்வாகிகளுக்கு வயது வரம்பு நிர்ணயம் – 13 பேரின் பதவி பறிப்பு?

Next Post

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

Related News

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை; மத்திய அரசு தகவல்

மான நஷ்ட வழக்கிற்கு எதிர்ப்பு; அமைச்சர்கள் மேல்முறையீடு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்; முதலமைச்சர் விஜய்

பைக்ரேஸ் விதிமீறல்; 2,000 பைக்குகளை பறிமுதல் செய்ததாக காவல்துறை தகவல்

டாஸ்மாக் ஊழியர்களை விசாரணையின்றி நீக்க கூடாது; உயர்நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானால் ஒரு சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்; சர்வதேச அணுசக்தி முகமை தகவல்

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies