'Made-in-India'- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி - சிறப்பு தொகுப்பு!
Sep 5, 2026, 10:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 5, 2026, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிலவுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் விண்வெளி வீரர்களை அனுப்பத் தயாராகி வரும் இந்தியா, அதற்கான முன்னேற்பாடு ஆய்வுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஸ்டார்ஷிப் விண்கலத்தின் மூலம் செவ்வாய் மற்றும் நிலவுக்கு ஏவுவதற்காக விண்வெளி வீட்டின் மாதிரியை இந்தியா உருவாக்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்களைத் தேடி நாசா ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் இந்தியாவும் Mars Orbiter Mission தொடங்கியது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கான தனது முதல் ஆளில்லாத விண்கலமான மங்கள்யானை 2013ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி இந்தியா விண்ணில் ஏவியது. கிட்டத்தட்ட ஓராண்டுக்குள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டனுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையைப் பெற்ற இந்தியா, முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் நாடு என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தது.

உலகளவில் மிகக் குறைந்த செலவில் சுமார் 74 மில்லியன் டாலர் செலவில் அனுப்பப்பட்ட செவ்வாய் ஆய்வுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத் தக்கது.

ஆரம்பத்தில் 6 மாதங்கள் மட்டுமே திட்டமிடப்பட்ட இப்பயணம், செவ்வாய் வட்டப்பாதையில் பல ஆண்டுகள் வெற்றிகரமாகத் தனது பணியைத் தொடர்ந்தது.

செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியேற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டுவரும் அமெரிக்கா, செவ்வாய்க் கிரகத்தின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப வீடுகளை அமைக்கத் தயாராகி அடிப்படை வீட்டின் வடிவங்களை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த இந்திய அறிவியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இஸ்ரோவின் ககன்யான் விண்வெளி வீரரான குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா ஆகியோர் இணைந்து, செவ்வாய் மற்றும் நிலவில் மனிதர்கள் தங்குவதற்காக பிரத்யேக விண்வெளி வீட்டின் மாதிரியை வடிவமைத்துள்ளனர்

Bhartiya Extraterrestrial Expandable Modular Habitat என்பதன் சுருக்கமே பீம் (BHEEM) ஆகும்.

இந்த விண்வெளி வீடு முக்கோணம், சதுரம் ஐங்கோணம் போன்ற மொத்தம் 422 வடிவியல் பலகைகளால் ஆனதாகும். ராக்கெட்டுகளில் மிகக் குறைந்த இடத்தை மட்டுமே அடைக்கும்படி மடிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

நிலவு மற்றும் செவ்வாய் கிரகப் பயணங்களுக்காக உருவாக்கப்பட்டு வரும், ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் என்ற பிரம்மாண்டமான, முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் சுமை வரம்புகளை மையமாகக் கொண்டே பீம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஒருமுறை விண்வெளிப் பயணத்துக்கான சுமார் 800 கன மீட்டர் payload கொள்ளளவுக்குள் இந்த ஒட்டுமொத்த பேனல்களையும் எளிதாக அடுக்கி அனுப்பிவிட முடியும் என்று கூறப் படுகிறது.

விண்வெளிக்குக் கொண்டு சென்ற பிறகு, இந்தப் பலகைகளை எளிதாக விரித்து ஒன்றிணைக்க முடியும் என்றும், முழுமையாக விரிவடையும் போது, இது சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) விட இரண்டு மடங்கு பெரிய வசிப்பிடமாக மாறும் என்றும் கூறப்படுகிறது.

16 விண்வெளி வீரர்கள் 6 மாதங்களுக்கும் மேலாகத் தங்கும் வசதி கொண்ட இந்த விண்வெளி வீட்டில் தூங்கும் அறை, உடற்பயிற்சிக் கூடம், மருத்துவ அறை, ஆய்வகம் மற்றும் தாவரங்களை வளர்க்கும் பசுமைக்குடில் (Greenhouse) ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.

ஏற்கெனவே செவ்வாய்கிரகத்தின் கடுமையான கதிர்வீச்சு மற்றும் தீவிர வெப்பநிலையைத் தாங்குவதற்காக, செவ்வாய் கிரகத்தின் மண்ணைப் பயன்படுத்தி Self-healing பாக்டீரியா செங்கற்களை உருவாக்கும் ஆராய்ச்சியிலும் இந்திய அறிவியல் கழகம் ஈடுபட்டுள்ளது.

மேலும் விண்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ்வதை நேரடியாகப் பயிற்சி செய்வதற்காக, லடாக்கின் ‘சோ கர்’ (Tso Kar) பள்ளத்தாக்கில் கடல் மட்டத்திலிருந்து 4,530 மீட்டர் உயரத்தில் (HOPE) Himalayan Outpost for Planetary Exploration என்ற செவ்வாய் கிரகப் போலி நிலப்பரப்பு நிலையத்தையும் இஸ்ரோ அமைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தைப் போன்றே மிகக் கடுமையான குளிர், குறைந்த ஆக்ஸிஜன் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இந்த பிரத்யேகக் கூடாரத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி, செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்தியாவின் ககன்யான் விண்வெளித் திட்டம் மற்றும் எதிர்கால செவ்வாய் கிரக ஆய்வுகளுக்கான மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக இந்த ‘மேட் இன் இந்தியா’ விண்வெளி வீடு பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியாவில் வடிவமைக்கப்படும் பீம் விண்வெளி வீடு ஒரு ஆச்சரியம் ஒரு விண்வெளி அறிவியல் வெற்றி மட்டுமல்ல. ஒருநாள் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் மட்டுமல்ல, மற்றொரு உலகிலும் வாழ்வதற்கு இந்த பீம் உதவக்கூடும்.

Tags: Starship spacecraft.Mars Orbiter MissionMangalyaanIndiaUnited StatesAstronautsMoon and Mars
Share
Tweet
SendShare
Previous Post

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies