உலக அரங்கில் பெரும் செல்வாக்கை பிரதமர் மோடி பெற்றுள்ளார் என்று, ரஷ்ய அதிபர் புதின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட பங்களிப்பு அளப்பரியது என்று குறிப்பிட்டுள்ள புதின், டெல்லிக்கு வந்தபோது, தனக்கு அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு நன்றியை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று, பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
















